அனுர குமார திசாநாயக்காவின் தெரிவைத் தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முந்தைய நாள் அமைச்சரும், நீண்ட கால தேசிய செயற்பாட்டாளருமான றோய் விக்னராஜாவிடம் இன்பத் தமிழ் வானொலி கேட்ட கேள்வியொன்றுக்கு அவர் கீழ் வருமாறு பதிலுரைத்தார்.
”இளைய தலைமுறையினர் உற்சாகத்துடனும், அவர் நாட்டிற்கு நன்மை செய்யப் போகின்றார், இலஞ்ச ஊழலை ஒழிக்கப் போகின்றார் என்றும், அரசியல் பரப்பில் உள்ளவா்களில் ஒரு சாரார் .வரும் ஏனைய அரசாங்கங்களைப் போல் ஒன்றும் செய்து விடப் போவதில்லை எனும் வழமையான பழமைவாதக் கருத்துடனும்,மற்றும் ஒரு சாரார் இவரைப்பற்றி நாம் இப்போது ஒரு சடுதியான முடிவுக்கு வர முடியாது இவருடைய நகா்வுகள் எவ்வாறாக இருக்கின்றன என்று அவதானித்த பின்பு தான் எதையும் பேச வேண்டும் என்று பார்க்கின்றார்கள்.”
இன்பத் தமிழ் வானொலிக்கு திரு றோய் விக்னராஜா வழங்கிய நோ்காணலின் காணொளியை எமது தளத்தின் வீடியோ இணைப்பில் காண்க