Karaithivu flood accidentஅம்பாறை மாவட்டம் காரைதீவில் இன்று மாலை இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் பயணித்ததாகவும், அவர்கள் பயணித்த உழவு இயந்திரத்தை வெள்ள நீர் தடம் புரட்டியதில் 06 சிறுவர்கள் உட்பட 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் குறித்த உழவு இயந்திரம் நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதுஇ ​​காரைதீவு நகரில் அமைந்துள்ள பாலம் ஒன்றின் அருகில் பாய்ந்த பலத்த வெள்ள நீர் ஓட்டம் காரணமாகக் குறித்த உளவு இயந்திரம் தடம் புரண்டதாகப் பொலிசாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, நிந்தவூரில் உள்ள மத்ரஸா பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பதினொரு மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதியும் உதவியாளருமே, தடம் புரண்டு அடித்துச் செல்லப்பட்ட உளவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.