
2015ம் ஆண்டு பிணை முறிப் பத்திர வழங்கல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்இ 2025 பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனுக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுபாஷினி சிறிவர்தனவினால், திரு.அர்ஜுனா மகேந்திரனை வழக்கின் ஒரு தரப்பாகக் குறிப்பிட்டுள்ள மெய்யுடை ஆவணத் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் சர்ச்சைக்குரிய பிணைமுறி ஊழல் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்த பிரதம நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.