Dr.Nalinda Jayatissa

 

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் அனுமதிக்கப்படாது என இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால்இ புலிகளின் சின்னங்கள்இ சீருடைகள் அல்லது அதன் உறுப்பினர்களின் படங்கள் இடம்பெறும் எந்தவொரு நிகழ்வும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் “நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கும் இறந்த தமது உறவினர்களை நினைவு கூரும் உரிமை உண்டு, எனினும் அந்த உரிமை விடுதலைப் புலிகளைக் கொண்டாடுவதற்குப் பயன்படுத்தப்படுத்தப்படக் கூடாது." இவ்வாறு கொழும்பில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெரிவித்தார்.